வலி.மேற்கு பாதீடு நிறைவேறியது ஈ.பி.டி.பி. மட்டும் அங்கு குழப்பம்!

வலி.மேற்கு பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 19 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஈ.பி.டி.பி எதிர்த்து வாக்களித்தது. அக்கட்சியின் 04 உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்தனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 09 உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 04 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி 03 உறுப்பினர்கள், சுயேட்சை அணி 02 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 01 உறுப்பினர் என்ற அடிப்படையில்
ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 04 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்