உலகின் முன்னணி வெளிநாட்டு முதலீட்டாளர் இலங்கை வருகை

உலகளவில் வளர்ந்து வரும் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என கருதப்படும் டொக்டர் மாக் மோபியஸ் இன்று (திங்கட்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

டொக்டர் மாக் மோபியஸ் தலைமையில் வர்த்தக மாநாடு ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படும் பாரிய கலப்பு அபிவிருத்தி திட்டமான Cinnamon Life இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

டொக்டர் மொபியஸ் 30 வருடத்திற்கும் அதிக காலமாக Templeton Investments இல் பணியாற்றிய நிலையில், டெம்பல்டன் வளர்ந்து வரும் சந்தைக் குழுமத்தின் தவிசாளராகவும் செயற்பட்டார்.

அத்துடன் குழுமத்தின் மேலாண்மை சொத்துக்களை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவுப்படுத்தியுள்ளார்.

மேலும் ஆசியா, லத்தின், அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை கேந்திரமாக கொண்டு வளர்ந்து வரும் சந்தை மற்றும் தேச எல்லை நிதியங்களை  அவர் ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்