சுவிஸ் தூதரக பெண் ஊழியரிடம் இன்றும் விசாரணை?

சுவிஸ் தூதரக பெண் ஊழியரிடம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அறிய முடிகின்றது.

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் நேற்று இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதன்போது அவரது உடல்நிலை குறித்த மதிப்பீட்டிற்காக சுவிஸ் தூதரக பெண் ஊழியர் ஒரு நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த பெண்ணிடம் இன்றைய தினமும் வாக்குமூலம் பெற்று அறிக்கையொன்றை பதிவுசெய்த சி.ஐ.டி.யினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறிப்பாக சி.ஐ.டி.யின் பொறுப்பு அதிகாரி முடிவு செய்தால் இன்றே சாட்சியப்பதிவு மேற்கொள்ளப்படும் என அறியமுடிகின்றது.

இதேவேளை கொழும்பு தலைமை நீதவான் இன்று சி.ஐ.டி.யிடம் குறித்த ஊழியரை ஒரு மருத்துவ அதிகாரியிடம் அழைத்து மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு பணித்திருந்தார்.

அத்தோடு சுவிஸ் தூதரக பெண்  ஊழியரின் பயணத்தடை உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்