கல்வியங்காடு சந்தையை நேரில் சென்று ஆராய்ந்தார் முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பொதுச் சந்தை நிலவரங்களை கடந்த (7) நேரில் ஆராய்ந்தார் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள்.

குறித்த சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைய நேரடி விஜயம் செய்த முதல்வர் சந்தையின் தற்போதைய நிலவரம், குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மாற்றங்கள் தொடர்பில் வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.

முதல்வரின் குறித்த நேரடி விஜயத்தில் யாழ் மாநகர உறுப்பினர்கள், மாநகரப் பொறியியலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், சந்தை மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்