கிழக்கு மாகாண மின்சார சபையின் 2019 ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள்

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண மின்சார சபையின் 2019 ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் (08) மட்டக்களப்பில் நடைபெற்றது .

இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலின் கீழ் மாகாண மின்சார சபைகளின் நலன்புரி சங்கங்களினால் மாகாண ரீதியாக விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் கிழக்கு மாகாண மின்சார சபையின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட விளையாட்டு போட்டிகள் மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது . கிழக்கு மாகாண மின்சார சபையின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாட்டில் மாகாண மின்சார சபைகளின் அலுவலக உத்தியோகத்தர்களின் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட வலைப்பந்து , கரப்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகள் மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது

நாடத்தப்பட்ட போட்டிகளில் இறுதி போட்டிக்கு தெரிவான அணிகளின் இறுதி போட்டிகள் (08) மாலை நடைபெற்றது .

இதன் அடிப்படையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு அலுவலக மகளிர் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கூடைப்பந்து போட்டியில் 8 – 14 என்ற புள்ளி அடிப்படையில் மட்டக்களப்பு மகளிர் அணி வெற்றிபெற்றது . மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆண்கள் அலுவலக இரட்டையர் பிரிவு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற பூப்பந்து போட்டியில் 2 -0 என்ற புள்ளி அடிப்படையில் அம்பாறை இரட்டையர் பிரிவு அணி வெற்றி பெற்றது. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மகளிர் அலுவலக இரட்டையர் பிரிவு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற பூப்பந்து போட்டியில் 2 -0 என்ற புள்ளி அடிப்படையில் மட்டக்களப்பு இரட்டையர் பிரிவு மகளிர் அணி வெற்றிபெற்றது இதேவேளை திருகோணமலை மற்றும் மகாஓயா அலுவலக ஆண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கரப்பந்து போட்டியில் இரண்டு சுற்றுப்போட்டிகளிலும் மகாஓயா அணி வெற்றிப்பெற்று முதல் இடத்தினை பெற்றுக்கொண்டது

இதன் அடிப்படையில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட மாகாண மின்சார சபைகளின் அலுவலக உத்தியோகத்தர்களின் அணிகளுக்கு சான்றிதழ்களும் ,பதக்கங்களும் , வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் டப்ளியு எம் எஸ் டப்ளியு வீரசிங்க ,பிரதேச பிரதம மின் பொறியிலாளர்கள், அலுவலக கணக்காளர்கள் மற்றும் , மனிதவள உத்தியோகத்தர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்