அரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகின்றது!

அரசியலமைப்புப் பேரவை இன்று(வியாழக்கிழமை) கூடவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருக்கான பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் வழமையாக கூடும் அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து கொள்வது வழமை.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இன்றி, அரசியலமைப்புப் பேரவை கூடவுள்ளது.

இதன் ஊடாக, அதன் செயற்பாடுகளுக்கு சட்டரீதியான தடைகள் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்