K2B டான்ஸ் ஸ்ரூடியோவினரின் 3 ஆவது ஆண்டுவிழாவில் தமிழ் சி.என்.என். இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு கௌரவிப்பு!

கனடா ரொரன்டோ K2B டான்ஸ் ஸ்ரூடியோவினரின் 3 ஆவது ஆண்டுவிழாவும் 2019 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் கலைவிழாவும் நேற்று கனடா ரொறன்ரோவில் நடைபெற்றது. தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு எமது தமிழ் சி.என்.என். நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

அவர்களின் வருடாந்த நிகழ்வில் தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு, K2B டான்ஸ் ஸ்ரூடியோ நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியமையை ஊக்குவிக்கும் முகமாக ஞாபகார்த்த நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவித்தார்கள்.

கனடா ரொரன்டோ K2B டான்ஸ் ஸ்ரூடியோ, கடந்த ஒக்ரோபர் மாதம் இலங்கையின் வடபகுதியில் வன்னி மாவட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட   50 குழந்தைகளுக்கு 3600 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும். போரின் போது தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நன்கொடையை வங்கியில் வைப்புச் செய்து து பெரும் சமூகப்பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிறுவனத்தினரின் கல்விப் பணியும் சமூகப் பணியும் மேன்மேலும் சிறப்புற தமிழ் சி.என்.என். குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்