ராஜகிரிய விபத்து தொடர்பாக நீதிமன்றுக்கு தெரிவிக்குமாறு உத்தரவு

ராஜகிரிய விபத்து தொடர்பான விசாரணைகளை முடித்து, நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாணை இன்று (திங்கட்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே நீதிபதி நிரஞ்சனா டி சில்வா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ராஜகிரிய விபத்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது ஓட்டுநருக்கு நீதிமன்றம் பயண தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற விசாரணையின்போது குறித்த இருவரும் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முன்னரே நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்