கூட்டமைப்பின் கூட்டம் யாழில் நடைபெறுகின்றது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஒன்று தற்போது யாழ்பாணத்தில் நடைபெற்று வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பத்தன் தலைமையில், யாழ்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த விசேட கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கை குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்களநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்