கல்முனையில் சபிரிகமக திட்ட முன்மொழிவுகூட்டம்

பாறுக் ஷிஹான்

நாட்டின் ஜனாதிபதியாக கோட்டபாயராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாத காலத்திற்குள் இந்த நாட்டிலே முன்னேற்றத்தையும்அபிவிருத்தியையும் செழிப்பையும் ஏற்படுத்தும் முகமாக ”சபிரி கமக்“ என்ற இந்த திட்டத்தைவழிநடாத்தியுள்ளார்கள்.  இதற்காக கல்முனை-03கிராம மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கல்முனைதொகுதி சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் கல்முனைப்பிரதேச அபிவிருத்திஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சிரேஸ்ட  சட்டத்தரணியு.எம்.நிஸார் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை(22) மாலை கல்முனை -03 ஆம் பிரிவுக்கான  ”சபிரி கமக்“திட்ட  முன்மொழிவு கூட்டம் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் கல்முனை-03 கிராம பிரவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.றினோஸா தலைமையில் இடம் பெற்றபோது அதில் பிரத் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுபோது,

இத்திட்டத்தின் ஊடாக முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக  30 இலட்சத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனுாடாக கிராமத்திலுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களை குழுவினால் தேவையறிந்து முன்மொழியப்படுகின்ற தேவைகளை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்

இங்கு கல்முனை பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எஸ்.நியாஸ், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிரதேச முக்கியஸ்தர் அஹமட் புர்க்கான், கிராம சேவகர் பௌசுல் லிஹாஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். மஜீட், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். பளீல் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்