‘தமிழர் தாயக மண்வளத்தைக் காப்போம்’ சாவகச்சேரியில் வெள்ளி விழிப்புணர்வு!

தமிழர் தாயகமெங்கும் எமது மண்வளம் சுரண்டப்படுவதை எதிர்த்து அமைதிமுறையிலான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Dry Zone Development Foundation  இன் தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் கட்சி பேதமின்றி இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும்  தாய் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று எம் தாய்மண்ணைப் பாதுகாக்கவேண்டியமையும் எம் ஒவ்வொருவரதும் கடமை ஆகும். தமிழர் தாயகமெங்கும்  கடந்த சிலவாரங்களாக  நடைபெற்றுவருகின்ற  சட்டவிரோத   மண் அகழ்வினை  உடனடியாக  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் .
அண்மையில்  அமைச்சரவையினால்  வழங்கப்பட்ட  மண் ஏற்றிக் கொண்டு செல்வதற்கான  அனுமதிப்பத்திரம் இதற்கான பிரதான காரணமாகும் . அவ் அனுமதியானது  உடனடியாக நீக்கப்படவேண்டும் .  அதேபோன்று  இயற்கை வளங்கள்  சூறையாடலை  தடுப்பதற்கு  அரச கூட்டுத்தாபனம்  அமைக்கப்படவேண்டும்  போன்ற  வேண்டுகோள்களினை  முன்வைத்து  தென்மராட்சி  மக்களினால்  எதிர்வரும்  27 ம் திகதியன்று  மாலை  மூன்று மணியளவில்  மாபெரும்  கவனயீர்ப்பு  போராட்டம்  நடாத்தப்படவுள்ளது .

ஆகவே, இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஒழுங்கமைப்பாளர் கேட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்