சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு தமிழ் சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது! – சாவகச்சேரியில் கலாநிதி அகிலன்

மண் அகழ்வு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயற்பாடுகளுக்கு தமிழ் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது. அவ்வாறு மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு ஆஜராகும் சட்டம் தெரிந்த அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்கவேண்டும்.

– இவ்வாறு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார் சாவகச்சேரியில் மண் எதிர்ப்புப் போராட்டத்தை ஒழுங்கமைத்த கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றால் சீரழிந்து தமிழினம் கூனிக் குறுகிக் கிடக்கின்றது . ஒரு காலத்தில் நள்ளிரவு 12 மணிக்குக்கூட சுதந்திரமாகத் திரிந்த பெண்கள், இன்று பகல் 12 மணிக்குக்கூட சிறு குழந்தை நிம்மதியாக வெளியே திரியமுடியாத நிலைமை அண்மைக்காலமாக உள்ளது. இன்று சிறுவர் துஷ்பிரயோகம் நாட்டில் அதிகரித்துள்ளது.

இதனைவிட, தற்போதைய அரசு அமைச்சரவையில் மண்விநியோகத்துக்குக்குரிய வழித்தடையைத் தளர்த்தியுள்ளது. இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றுக்கு ஆஜராகின்ற எமது அரசியலிலும் பிரபலமான எமது தமிழ் சட்டத்தரணிகள் இன்று கள்ள மண் கடத்தல்காறர்களுக்காகவும் ஆஜராகின்றனர். இது வேதனைக்குரிய மனம்வருந்தத்தக்க விடயமாகும்.

மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இவ்வாறான சட்டம்படித்த அரசியல்வாதிகளை அடுத்துவரும் தேர்தல்களில் மக்கள் நிராகரிக்கவேண்டும் – என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்