4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் கடந்த 27ஆம் திகதி நடந்த ஆண்டு நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்காக, இலங்கை அரசாங்கம் நிதியைத் திரட்டுவதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்