ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சியாக எவ்வாறு செயற்படுவது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்படவுள்ளது.

அதேவேளை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவையும் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்