ஹட்டன் பகுதியில் மஞ்சள் கோட்டடில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்து ஒருவர் காயம்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்தியில் உள்ள மஞசள் கோட்டுப்பகுதியில் இன்று (30) பகல் 12.00 மணியளவில் திகதி மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்,பத்தனைபகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கரவண்டி,கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பிரதேசத்தினை நோக்கி வந்துகொண்டிருந்த ஜீப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து கொட்டகலை பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றி வந்த ஜீப் ரக வண்டியொன்று மஞ்சள் கோட்டப்பகுதியில் தீடீரென தடை ஏற்படுத்தியதனால் பின்னால் வந்த முச்சக்கர வண்டியும் தடையினை ஏற்படுத்து பின்னால் சொகுசு தனியார் பொது போக்குவரத்து சேவை பஸ் வண்டி  முச்சக்கரவண்டியினை மோதுண்டுள்ளது.அதனால் முன்னால் இழுத்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ஜீப் வண்டியுடன் மோதுண்டுள்ளதாகவும் இதனால் முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தலையில் காயமேற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்;ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையினை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.
அதனை தொடர்ந்து பொலிஸார் மோதுண்ட வாகனங்களை அகற்றியதன் பின்னரே போக்குவரத்து வழமைக்கு திரும்பின.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்