இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகமும் இணைந்து நடார்த்திய தெய்வீக கிராம நிகழ்வு 2019…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகமும் இணைந்து நடார்த்திய தெய்வீக கிராம நிகழ்வு 2019…கோமாரி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் திரு.இரா.திரவியராஜ் தலைமையில் 27/12/2019 அன்று இடம்பெற்றது.
ஆரம்பநிகழ்வாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்கள் கலந்துகொண்டார்.
முதல் நிகழ்வாக
நந்திக்கொடியினை அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்களினால் ஏற்றப்பட்டது.
இரண்டாம் நிகழ்வாக
கோமாதா பூஜை,மரநடுகை,பிடி அரிசி சேமித்தல்,வஸ்து தானம்,யோகாசனம், சூரிய நமஸ்காரம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு.எஸ்.உதயகுமார் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.

மேலும் இன் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், ஆலய அறங்காவலர்கள்,சுமார் 750 ற்கும் மேற்பட்ட அற நெறிப்பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் , என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்