உலக சேமத்திற்கான மகாயாகம் 2020/01/01 மட்டு- ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் இடம்பெறவுள்ளது!!

மட்டக்களப்பு பெரிய உப்போடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் எதிர்வரும் 01/01/2020 அன்று பீடத்தின் குரு முதல்வர் ஆன்மீகக்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் உலக சேமத்திற்கான மகா யாகம் நிகழ்த்தப்பட உள்ளது.

உலகை ஆளும்18 சித்தர்களையும் ஆவாகனம் செய்து பூரண கலசங்கள் வைக்கப்பட்டும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட 108 உயிர் ஜீவ மூலிகைகள் மற்றும் இலங்கையில் பெறப்பட்ட ஜீவ மூலிகைகள் திரவியங்களை கொண்டும் உலக மக்களின் நோய்ப்பிணி பசிப்பிணி தீர்த்திடவல்ல மக்களுக்கு நிம்மதியான வாழ்வினை நல்கவல்ல இவ் மகாயாகம் புதிய ஆண்டானது உலக மக்களுக்கு சுபீட்சத்தினை நல்க வேண்டியும் நிகழ்த்தப்பட உள்ளது.

மகா சக்திபடைத்த சித்த புருசர்கள் மகா ஞானிகள் யோகிகளின் சூட்சும, நேரடிப் பார்வையில் அவர்களின் பரிபூரண அருட்கடாட்சம் நிறைந்ததாகவும் புதிய ஆண்டினை வரவேற்கும் புனித நிகழ்வாகவும் வருகை தரும் பக்தர்களின் மனக்குறைகள் அகன்று பெரும் பேற்றினை நல்கவல்ல இந்த மாபெரும் யாகத்தில் அனைவரும் ஜாதி, மத வேற்றுமைகளைக்கடந்து நாம் மனிதர்கள் எனும் ஒருமைப்பாட்டுடன் பக்திபூர்வமாக ஈடுபட ஸ்ரீ பேரின்ப ஞானபீடத்தின் ஊடாக ஆன்மீக அழைப்பினை விடுத்திருக்கிறார்கள்.

மகா யாகம் நிறைவுற்றதும் ஆன்மீகக்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஆன்மீக ஞான அருள் உபதேசமும் அருள் நிறைந்த ஆசீர்வாதமும் அன்னதானமும் இடம்பெறவிருக்கிறது.

எனவே ஆன்மீக அன்பர்கள் தவறவிடாமல் இந்த தெய்வீக அலைகளோடு உங்களையும் சங்கமிக்க செய்திடுங்கள்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்