கொழும்பில் உள்ள சம்பந்தனின் வீட்டுக்கு சிக்கல்?

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தங்கியிருக்கும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்வரை பயன்படுத்த கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அந்தவகையில் கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள பி 12 இல் இருக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பை அவருக்கு வழங்க கடந்த அரசாங்கம் அமைச்சரவை முடிவு செய்தது.

அதன்படி பின்னர், நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாத்திலக, இந்த ஆண்டு பெப்ரவரி 26 அன்று அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார், அதில் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை இந்த வீட்டைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குறித்த குடியிருப்பின் பராமரிப்பிற்காக ஐந்து தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சின் மூலம் பணம் செலுத்தப்படுகின்றது.

அதுமட்டுமன்றி கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த கட்டடத்தை புதுப்பிப்பதற்கு சுமார் 35 மில்லியன் ருபாய் செலவிப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் வேண்டுகோளின் பேரில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டதுடன் KX 2330 மற்றும் KO 6339 வாகனங்கள் மற்றும் 600 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை ஒதுக்கவும் அதே அமைச்சரவை பாத்திரத்தின் ஊடக அங்கீகாரமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வீடுகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வசித்துவரும் இல்லம் குறித்து தற்போது கேள்வியெழுந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்