உலர் உணவுப் பொதிகளும், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும்

G.S.O அமைப்பின் ஏற்பாட்டில் வெளிநாட்டு உறவுகளின் நிதியுதவியுடன் மேன்கமம், கிளிவெட்டி, குமாரபுரம், பாரதிபுரம், சிவபுரம், மல்லிகைத்தீவு, புளியடிச்சோலை, கங்குவேலி ஆகிய கிராமங்களில் வசிக்கும் 95 பேருக்கான உலர் உணவுப் பொதிகளும், 50 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும்  (28.12.2019) சனிக்கிழமை மேன்கமம் அ.த.க வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இவற்றை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் ச.குகதாசன் மற்றும் மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் ஆகியோர் வழங்கி வைப்பதையும் பயனாளிகளையும் படங்களில் காணலாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்