தமிழில் தேசிய கீதம் பாடக்­கூ­டாது என்­ப­தற்கு அரசின் தெளி­வான பதில் அவ­சியம்: ஸ்ரீநேசன்

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது  எனும் விவ­காரம் தமிழ் மக்­க­ளி­னதும், தேசிய ஒற்­று­மையை விரும்­புவோர் மத்­தி­யிலும் ஒரு சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. இச் சர்ச்­சைக்கு தெளி­வான பதிலை அரசாங்கம் கூற­வேண்டும் என மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜீ. ஸ்ரீநேசன் தெரி­வித்தார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என்ற  விவ­காரம் சம்­பந்­த­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜீ.ஸ்ரீநே­சனின் கருத்தை  ஊட­கங்கள் அறிய முற்­பட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் இது­பற்றி மேலும் விப­ரிக்­கையில்,

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது, அப்­படி அரசு கூற­வில்லை எனும்  செய்­தி­களை எதிரும் புதி­ரு­மாக ஊட­கங்கள் வெளி­யி­டு­கின்­றன. இச்­செய்­தி­களின் நம்­பகத்தன்­மையை யாராலும் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை. புதிய ஜனா­தி­ப­தியும் அரசும் பதவி­களைப் பொறுப்­பேற்று இரண்டே இரண்டு மாதங்­கள்தான் ஆகின்றன. அத­னி­டையில் தேசிய கீதத்தை, ஒரு தேசிய மொழியில் பாடு­வதில் சர்ச்சை தோற்­று­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதன் உண்­மைத்­தன்­மையை இதே அர­சுதான் வெளிக்­கொ­ண­ர­ வேண்டும்.

தமிழ் மொழி, இந்த நாட்டின் ஒரு தேசி­ய­மொழி. தேசிய கீதத்தை, தேசிய மொழியில் பாடு­வதில் ஏதும் தவறு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

அரசும் அதன் சகாக்­களும் வீண்­பு­ர­ளி­களை தோற்­று­வித்து, தேசிய ஒற்­று­மைக்கு பங்கம் விளை­விக்கக் கூடாது.  தேசிய பாது­காப்புப் பற்றியும் தேசிய ஒற்­று­மை­ பற்­றியும் தேசிய அபி­வி­ருத்தி பற்­றியும்  கூறிக் கொண்­டி­ருக்கும் ஜனா­தி­பதி இதற்கு சரி­யான பதிலை கூற­வேண்டும். தமிழ்­மொழி மூல­மாக தேசிய கீதம் பாடப்­பட்டு வரும்­போது ஏன் இந்தப் புதிய சர்ச்சை கிழப்­பப்­பட்டிருக்­கி­றது? சிங்­கள மக்­களின் ஏகோ­பித்த அபி­மா­னத்தை பெறும் நோக்­கமா அல்­லது பொதுத் தேர்­தலில் வாக்கு வங்­கியை நிரப்­பவா? இதில் ஒன்றோ அல்­லது பலவோ சரி­யாக இருக்­கலாம் எது சரி­யென புரி­ய­வில்லை.

தேசிய ஒற்­று­மையை விரும்பும், ஜனா­தி­பதி எந்­த­வொரு இனத்தின் மத்­தி­யிலும் அந்த இனம் விரும்­பாத ஒன்றை திணிக்க முற்­படக் கூடாது. இவ்­வா­றான செயல்­களே புலிகள் இயக்கம் தோன்றக் காரா­ண­மா­யி­ருந்­தது என்ற உண்மை ஜனா­தி­ப­திக்குத் தெரி­யாத விட­ய­மல்ல. அப்­ப­டி­யான யுகத்தை இந்த நாட்டின் தமிழ் மக்கள் மறந்­தி­ருக்­கி­றார்கள். அதை நினை­வூட்­டு­வ­துபோல் இது இருக்­கி­றது.

இந்த நாட்டை ஆண்ட பழைய அர­சு­களும் இந்­தப் ­பா­ணி­யி­லேதான் ஆண்­டு­வந்­தன. பண்­டாரநாயக்க அதன் தோற்­றுவாய். ஆதலால், அதே பாணியில் இப்போதைய ஜனாதிபதி அரசை நகர்த்த முற்படக் கூடாது. அது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நாட்டுக்கு தீங்கை கொண்டுவரும்.  ஆதலால், இவைகளை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்