தமி­ழர்­க­ளுக்­கான நிரந்­தர தீர்வை பெறும் பொறி­மு­றையில் இந்­திய தலை­யீடு அவ­சியம் – தமி­ழக மாநிலப் பிர­முகர்­க­ளிடம் சம்­பந்தன் எடுத்­து­ரைப்பு

அர­சியல் தீர்வு விட­யத்தில்  அர­சாங்­கத் தின் நிலைப்­பாடு என்­ன­வென்­பதே எமது கேள்­வி­யாக உள்­ள­தெ­னவும்,  தமிழ் மக்­க ளின் அர­சியல் பிரச்­சி­னை­களில் நிரந்­தர தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுக்கும் பொறி­மு­றையில் இந்­தி­யாவின் முழு­மை­யான தலை­யீடு இருக்க வேண்டும் என்றும்  பார­தீய ஜனதா கட்­சியின் தமி­ழக மாநிலப் பிர­முர்­க­ளிடம்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

 


இந்­தி­யாவின் தமி­ழ­கத்தில்  வசித்­து­வரும்  இலங்கை அக­திகள் குறித்தும் இதன்­போது  கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன.
ஆர்.சம்­பந்தன்   தமக்­கான மருத்­துவ சிகிச்­சை­களை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில்  கடந்த வாரம் இந்­தி­யா­விற்­கான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.
தனிப்­பட்ட விதத்தில் அமைந்த இந்த பய­ணத்தின்போது தென்­னிந்­தி­யாவில் அர­சியல் சந்­திப்­புகள் சிலவும் இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பாக தற்­போது இந்­தி­யாவின் ஆளும் கட்­சி­யாக உள்ள பார­தீய ஜனதா கட்­சியின் தமி­ழக மாநிலப் பிர­முர்­க­ளுடன்   அவர் சந்­திப்­பொன்றை நடத்­தி­யுள்ளார்.    தமி­ழக பார­தீய  ஜன­தாவின் பொதுச் செய­லாளர் வானதி ஸ்ரீநி­வாசன் மற்றும் அர­சியல் பிர­மு­கர்கள் இந்தச் சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர்.

நேற்று முன்­தினம் நாடு திரும்­பிய கூட்­ட ­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்­த­னிடம் இந்த சந்­திப்­புகள் குறித்து வின­வியபோது அவர்  குறிப்­பி­டு­கையில்,
நாட்டில் இப்­போது புதிய ஆட்சி ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்கள் ஆத­ரித்த தரப்பு தோல்­வியை சந்­தித்து பெரும்­பான்மை ஆத­ரவை கொண்ட கட்சி ஆட்­சிக்கு வந்­துள்­ளது. இதில் தமிழ் மக்­களின் நிலை­மைகள் இன்று கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எவ்­வாறிருப்­பினும் ஜனா­தி­ப­தியின் சிம்­மா­சன உரை அடுத்த பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரில் இடம்­பெ­ற­வுள்­ளது.  இதுவே அவ­ரி­னதும், அவ­ரது அர­சாங்­கத்­தி­னதும் கொள்கை விளக்க உரை­யா­கவும் அமை­ய­வுள்­ளது. ஆகவே இந்த அர­சாங்கம் எவ்­வா­றான மன நிலையில் உள்­ளது, இவர்­களின் நிலைப்­பா­டுகள் என்ன என்ற விட­யங்­களை தெளி­வா­கவும், உறு­தி­யா­கவும், கொள்கை ரீதி­யா­கவும் நாம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வ­தற்கு இதுவே உரிய சந்­தர்ப்­ப­மாகும்.

இந்த அர­சாங்கம் ஜன­நா­யக ரீதியில் அர­சியல் தீர்வு விட­யத்தில் இதய சுத்­தி­யுடன் செயற்­பட வேண்டும் என்­பதை நாம் அவர்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். எமது அர­சியல் பிரச்­சி­னைகள் குறித்து தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில் நாம் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தத் தயா­ராக உள்­ள­தாக அறி­வித்­துள்ளோம்.

அதற்கும் நாம் தயா­ரா­கவே உள்ளோம். அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழர் அர­சியல் தரப்பு மாத்­திரம் இன்றி சர்­வ­தேச தரப்பின் ஒத்­து­ழைப்­பு­களும் இருக்க வேண்டும்.
இதில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அதி­க­ மாக இருக்க வேண்டும் என்றே நாம் விரும்­பு­கின்றோம். இந்­தியா முன்­வைத்த 13 ஆம் திருத்தம் முழு­மை­யாக நடை­மு­றைப்படுத் ­தப்­பட வேண்டும். எமக்­கான அதி­கா­ரங்கள் சுய நிர்­ணய ஆட்­சி­மு­றைமை எமக்கு கிடை க்க வேண்டும்.

எமது மக்­களும் இரண்டாம் பிர­ஜைகள் போன்று நடத்­தப்­ப­டாது அவர்­க­ளுக்கும்  சம அந்­தஸ்து வழங்­கப்­பட வேண்டும். இது குறித்து இந்­தியா தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்து தமிழர் விட­யத்தில் அக்­கறை செலுத்த வேண்டும் என நாம் கேட்டு நிற்­கின்றோம்.

மேலும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை நாம் இலங்­கையில் சந்­தித்த நேரத்தில் மிகவும் குறு­கிய கால எல்­லைக் குள் எம்மால் நீண்ட கலந்­து­ரை­யாடல் எத­னையும் முன்­னெ­டுக்க முடி­யாமல்  போயுள்­ளது. எனினும் இந்­தி­யாவில் சந்­திப்பை நடத்த அவர் இணக்கம் தெரி­வித்த நிலையில் எமக்கு இந்­தி­யா­விற்கு வரு­மாறு அழைப்பும் விடுத்தார். அந்த சந்­திப்பு இன்­னமும் இடம்­பெ­ற­வில்லை. ஒரு­ சில தாம­தங்கள் கார­ண­மாக இந்த சந்­திப்பு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. எவ்­வாறிருப்­பினும் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு புது­டில்லி சென்று அவரை சந்­தித்து  எமது நிலைப்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யா­டுவோம்.
தற்­போது இந்­தி­யாவில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிர­ஜா­வு­ரிமை திருத்தச் சட்டம் மூல­மாக இலங்கை வாழ் மக்கள் அதி­க­மாக சிர­மங்­களை எதிர்­நோக்க நேர்ந்­துள்­ளது. எனினும் எமது மக்­களை மீண்டும் எமது தாய­கத்தில் ஏற்­றுக்­கொள்ள நாம் தய­ாராக உள்ளோம். அவர்கள் மீண்டும் எம் மண்­ணுக்கு வர­வேண்டும். அவர்­களின் தாயக பூமியில் அவர்கள் நிம்­ம­தி­யாக வாழ வேண் டும். அதற்­கான வழி­மு­றை­களை அர­சாங்கம் செய்­து­கொ­டுக்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த விட­யங்கள் குறித்தும் அர­சாங்கம் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது.

அவை இன்று நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது உள்­ளன. எனவே இந்­தி­யாவில் அக­தி­க­ளாக வாழ்ந்­து­வரும் இலங்கை அக­திகள் குறித்து இரு நாட்டு அர­சாங்­கங்­களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்மானத்தை எட்ட வேண்டும். தமிழகத்தில் தங்கியிருக்க விரும்பும் மக்கள் அங்கேயே வாழவும் இலங்கைக்கு திரும்பி வர நினைக்கும் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வரவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் குறித்து கலந்துரையா டப்பட்டது. எமது அரசியல் நகர்வுகள் குறித்து சர்வதேசம் பார்த்துக்கொண்டுள்ளது. எனவே அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடி க்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று    வலியுறுத்தினேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்