அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்களுக்கு இறுதி எச்சரிக்கை!

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனங்களைப் பெற்றிருந்த தூதுவர்கள், அதிகாரிகளை டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, பலர் நாடு திரும்பியுள்ள போதிலும், சிலர் இன்னமும் திரும்பவில்லை.

இதையடுத்து, ஜனவரி 15ஆம் திகதி வரை குறித்த அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே, பிரான்ஸ், இத்தாலி, சவூதி அரேபியா, கட்டார், மாலைதீவு, பாகிஸ்தான், மியான்மார், பங்களாதேஷ், பலஸ்தீனம், கென்யா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்