பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா?

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த 31ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இதனையடுத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இந்தநிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இந்த திருத்தம் செய்யப்பட்ட பின்னர், விரைவில் மேஜர் ஜெனரல் சுமேத பெரோ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்