இந்தியாவுக்கு பயணமாகிறார் தினேஷ் குணவர்தன

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு,  இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருப்பார் என கூறப்படுகின்றது.

இலங்கை வெளியுறவு அமைச்சர்கள், தங்கள் முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது வழமையான நடைமுறையாக காணப்படுகின்றது.

இதேவேளை பதவியேற்ற உடனேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதுடெல்லிக்குச் சென்று, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்