மத்திய வங்கி பிணைமுறி குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்- விமல்

மத்திய வங்கி பிணைமுறி குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்குமென அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  நேற்று (வெள்ளிக்கிழமை)  ஐ.தே.க  நாடாளுமன்ற  உறுப்பினர் ஹர்ச டி சில்வா பிணைமுறி உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பான விடயங்களை வெளியிட வேண்டுமென சபாநாயகர் கரு ஜெயசூரியவைக் கேட்டுக்கொண்டார். இதன்போது குறுக்கிட்டு பேசிய போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி குற்றவாளிகள், யார் என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, “மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை 900மில்லியன் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையான திருடர்கள் யார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதற்கிணங்க அதனை விரைவாக வெளியிடுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்