கோட்டாக்கு அரசியல் தீர்வில் அக்கறையில்லை! – சுமந்திரன்

புதிதாக வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு முழுமையான – சரியான பார்வை உள்ளவராகத் தெரியவில்லை.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..ஏ.சுமந்திரன்.

இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு சூரியன் எவ்.எம்மின் விழுதுகள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு தீர்வுக்கான வாய்ப்புக்கள் வெகுவாகக் குறைவடைந்துள்ளன. கடந்த 4 – 5 வருடங்களில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் பல சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நாங்களும் அவற்றைச் சரியான முறையில் உபயோகப்படுத்தியிருந்தோம். ஆனாலும், அவை நிறைவேறாமல் இழுத்தடிக்கப்பட்டன. புதிதாக வந்த ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு முழுமையான – சரியான பார்வை உள்ளவராகத் தெரியவில்லை. இன்றைய நிலையில் தீர்வுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றே கூறலாம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்