அரசியல் தீர்வுக்கான காலம் கனிந்துவிட்டது! – சம்பந்தன் நம்பிக்கை

சிங்கள மக்களும் அரசியல் தீர்வு தொடர்பில் விருப்பம் உள்ளவர்கள். ஆனால், ஜனநாயகத்துக்கு மாறானஇந்த கருத்துக்கள் வெளியே பரப்பவிடப்பட்டுள்ளன. இந்த அரசுடன் பகைக்க நாம் விரும்பவில்லை. அவ்வாறான ஒரு கருத்தை நாம் சொல்லவில்லை. ஜனநாயக ரீதியான தேர்தல் வந்தபோது எமது மக்கள் எவ்வாறாக நடந்துகொள்ளவேண்டும் என்பதையே நாம் மக்களுக்குக் கூறினோம்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.

இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு சூரியன் எவ்.எம்மின் விழுதுகள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

அரசியல் தீர்வைக் காண்பதற்காக – நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக – நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக – அதன் மூலமாக இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் – சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் சகலரும் ஒற்றுமையாக – சுபீட்சமாக – வாழ்வதற்கு உதவி செய்வதற்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம்.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக நாங்கள் அவருடன் பேசியிருக்கின்றோம். இந்தமுறை இரண்டாவது தடவையாகப் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டு வந்தபோது நாங்கள் அவருடன் பேசியிருக்கின்றோம். நாங்கள் இந்தியாவுக்கு வந்து டெல்லியுடன் பேசவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அதற்குரிய ஒழுங்குகள் நடைபெறுகின்றன. விரைவில் டெல்லி சென்று அவர்களுடன் பேசுவோம்.

இந்தியாவை நாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவில்லை. மற்றவர்கள் உதவ வந்தால் அந்த உதவியை நிதானமானமுறையில் நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். அதில் அவர்கள் தமது நலன் அடங்கியிருந்தாலும் பறவாயில்லை. அதில் என்ன தவறு. தமக்காக வந்து எமது பிரச்சினையைத் தீர்த்துவைத்தாலும் பறவாயில்லை. அதுதானே எமக்குத் தேவை.

,இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய காலம் வந்துவிட்டது என்று நான் நினைக்கின்றேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்