சுவிஸில் திருப்பள்ளியெழுச்சி வெளியீடு

செந்தமிழ் இறைவன் திருமுன் திருவாதவூரர் பாடிய திருப்பாக்கள் இனிமையோடு கேட்போர் மனத்தையுருக்கும் அருள் விளக்கத் தோடும் இருந்த காரணத்தால் ஞானாலிங்கர் திருவாதவூரரை நோக்கி “உனக்கு «மாணிக்கவாசகன்» என்ற பெயர் தந்தோம்“ என்று கூறி அவருக்கு அப்பெயரைத் தீக்கை திருப்பெயராகச் சூட்டினார். அன்று முதல் வாதவூரர் என்ற திருப்பெயருடன் மாணிக்க வாசகர் என்ற பெயரும் அவருக்கு வழங்குவதாயிற்று.

இப்பெருமான் அளருளிய திருவெம்பாவைத் திருநோன்பு தொடங்கும் காலத்தில் தெய்வத் தமிழை, செந்தமிழ் மறையை, சைவப்பெருமையை, பிரபாகரப் பெருங்காப்பியம் படைத்தளித்து ஈழத் தலைமகனை, ஈழமண்ணை, அன்பை, உறவை இனிய அன்புடன் எழுதும் பாவலர், பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் ஐயா அவர்கள் தெய்வத்தமிழில் கருவறையில் செந்தமிழ்த் திருமறைவழிபாட்டினை ஓங்குவிக்கும் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் பெருமானிற்கு இறையின்பச் செவிகுளிர அழகு தமிழில் திருப்பள்ளியெழுச்சி படைத்தளித்திருக்கின்றார்.

01. 01. 2020 புதன்கிழமை காலை ஞானலிங்கேச்சுரத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடப்பெற்று, நண்பகல் 12.00 மணிமுதல் இப்பாவினை திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வைத்தார். முதற்படியினை சிவஞானசித்தர்பீட நிறுவனர்களில் ஒருவரான திருநிறை. நடராஜா சிவயோகநாதன் ஐயா மற்றும் இன்றைய நல்கையர் (உபயகாரர்) திரு. இராசன் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்