நாடாளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது குறித்து ஆய்வு

கோப் குழு உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துலையாடலுக்கு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி தெரிவுக்குழு, அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழு உள்ளிட்ட தெரிவுக் குழுக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவது குறித்து இதன்போது முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஜனாதிபதி நிறைவு செய்ததுடன், 10 தெரிவுக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டன.

இந்த விடயம் குறித்து அண்மையில் கலந்துரையாடப்பட்டதுடன், ஆளும் கட்சியினரின் அதிக பெரும்பான்மையுடன் இந்த குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களையும் இந்த தெரிவுக் குழுவிற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என இதன்போது எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்