யாழ்ப்பாணம் .பண்ணை லவ்லி கூல்பாரில் மதுபோதையில் காடையர்கள் வெறித்தனம்! இனங்காண்பவர்களுக்கு ஒரு லட்சம் சன்மானம்

https://www.facebook.com/nagan.bala/videos/755976241555751/யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரைச் சந்தியில் அமைந்துள்ள லவ்லி கூல்பாரில் நேற்று இனந்தெரியாத காடையர்களால் களவு நோக்கத்துடன்  நடத்தப்பட்ட வெறித்தனத்தில் லவ்லி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஊழியரைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் அவர்கள் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறைகுடிபோதை வெறித்தனத்துடன் நடந்துகொண்ட காட்டுமிராண்டி காடையர்களை இனங்காண்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

யாழ்மாநகரசபைக்குச் சொந்தமான பண்ணை கடந்கரைப் பூங்காவில் பகல் வேளைகளிலும் மாலை வேளைகளிலும் இரவு வேளைகளிலும் இளைஞர்கள் மது அருந்துவதும், பல ஜோடிகள் தகாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையும் கண்டறியப்பட்டு, இந்த விடயங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு லவ்லி கூல்பார் நிர்வாகத்தினரால் யாழ்.மாநகரசபை நிர்வாகத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டது. ஆயினும், இந்த விடயங்கள் தொடர்பில் யாழ்.மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்கிலே காணப்பட்டது. வெறும் வரி வசூலிப்பதில் மட்டுமே தமது குறிக்கோளாக உள்ள யாழ்.மாநகரசபை, இவ்வாறான சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பில் அக்கறையீனமாகச் செயற்படுகின்றமை வேதனைக்குரியது. ஒரு பொறுப்புமிக்க உத்தியோகத்தர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு இதுவரை மாநகரசபையால் நியமிக்கப்படவில்லை.

இந்தநிலையில், நேற்று இரவு 10 மணியளவில் காரில் வருகைதந்த அறுவர் அடங்கிய காடையர் குழு பூங்காவுக்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து மது அருந்திவிட்டு, நிறைபோதையில் 12.40 மணியளவில் காட்டுமிராண்டித் தனத்தில் பூட்டியிருந்த கடைக்குள் இருவர் வந்து தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு களவெடுக்கும் நோக்கில்  லவ்லி கூல்பார் ஊழியர் மீது  தாக்கியுள்ளனர்.. இவர்கள் தாக்குவதைப் பூங்காவில் இருந்து அவதானித்த இவர்களுடன் வந்த ஏனைய நால்வரும் ஓடிவந்து கதறக் கதற அந்த ஊழியரைத் தாக்கியுள்ளனர்.இது தொடர்பில் அருகிலிருந்த   நாட்டின் பாதுகாப்பைப் பேணும் விசேட அதிரடிப்படையினர் விடயமறிந்து ஒளி எழுப்பி (ரோச்லைட் அடித்து) பார்த்துவிட்டு கண்டும் காணாமல் இருந்துள்ளனர். என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் வருகைதந்தவர்கள் அசோக், தீபன், குட்டி என்ற பெயர்களால் தம்மை அழைத்துள்ளனர் என தாக்குதலுக்குள்ளான பணியாளர் தெரிவித்துள்ளார்.

சி.சி.ரி.வி. கமெராமூலம் பதிவாகிய வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை அடையாள்படுத்துபவர்களுக்கு – அவர்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு – ஒரு லட்சம் ருபா சன்மானம் வழங்கப்படும் ன லவ்லி கூல்பார் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புகளுக்கு:
கலாநிதி மு.அகிலன்

0778630268

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்