முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மலையக்த்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் 53 வது பிறந்த தின வைபவத்தினை முன்னிட்டு மலையக பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (10) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன..
முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு நல்லாசி வேண்டி ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் டிக்கோயா வனராஜா வழிப்பிள்ளையார் ஆலயத்திலும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.இதில் முன்னாள் ஹட்டன் நகரசபையின் தலைவரும் உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார்,உட்பட ஹடடன் நகர சபையின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பூஜை வழிபாடுகள் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சந்திராநந்த சர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
கொட்டகலை டிரேட்டன் தோட்ட மக்கள் முன்னாள் அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களுக்கு நல்லாசி வேண்டி ஒழுங்கு செய்த பூஜை வழிபாடுகள்,கொட்டகலை கே.ஓ.பிரிவு விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
இதில் கொட்டகலை தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் கொட்டகலை பிரதேச சபை தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தலவாக்கலை நகரில் விளையாட்டு மைனத்தில் பிறந்த தின நிகழ்வினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்வும் முக்குக் கண்ணாடி வழங்கும் இன்று (10) காலை மணியளவில் தலவாக்கலை விiயாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது சுமார் 1500  பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சரின் ஆதாரவாளர்களால் இரத்ததானமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச சகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்