மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு குறித்து ஆய்வு!

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பாக ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் புவியியல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர் கசிவு ஏற்பட்ட நிலத்தின் தன்மையையும், கசிவின் ஆழம், நீர் கசிந்த திசை என்பவற்றை உயர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆராய்ச்சிக்கு உட்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசோதனை அறிக்கையானது இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்