இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது சுகாதார அமைச்சு!

காய்ச்சல், இருமல், தடிமன் என்பன சாதாரண நோய் அறிகுறி எனவும் புதிய வைரஸினால் ஏற்பட்ட அடையாளம் தெரியாத நோய் அல்ல எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்ப்ளுவென்சா நோய் பரவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இதுகுறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பருவப்பெயர்ச்சி மழையுடன் இன்ப்ளுவென்சா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் குறைந்தளவிலான நோயாளர்களே பதிவாகியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்று நோய்கள் குறித்து மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்