மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று 10 வெள்ளிக்கிழமை புனித மிக்கல் கல்லூரியின்(2006 A/L) பழைய மாணவர்களால் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

இதன்போது நகரை தூய்மை படுத்தும் நோக்கமாக நீர் தேங்கி நிற்கும் பொருட்கள், நீர் வெளியேறும் வாய்க்கால்களில் தேங்கியிருந்த கழிவுப் பொருட்களையும் அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எடுத்து காட்டினார்.

விழிப்புணர்வு நடைபவனியில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அலுவலர்கள், பொதுசுகாதார பரிசோதர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களும் மற்றும் இளைஞர்கள்,சமூக சேவையாளர்கள், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்