ரஞ்சன் ராமநாயக்க விவகாரம்: முச்சக்கரவண்டி சாரதிக்கு பணப்பரிசு

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசு வழங்கி அவரை கௌரவிக்கவுள்ளதாக இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பாக மக்கள் மத்தியில் இருந்த தவறான கருத்துக்கள் இந்த முச்சக்கர வண்டி சாரதியின் நடவடிக்கையினால் நீங்கியுள்ளது.

இவரின் நடவடிக்கையினால் நாட்டில் மறைந்திருந்த பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

யாரோ ஒரு பயணி மறதியாக முச்சக்கர வண்டியில் விட்டுச்சென்ற ரஞ்சனின் இந்த குரல் பதிவுகள் அடங்கிய தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த குறித்த சாரதியை  பொலிஸில் ஆலோசனை பெற்றுக்கொண்டு, அவருக்கு 10 இலட்சம் ரூபாய் பணத்தொகை வழங்கி கௌரவிக்க தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்