ரஞ்சனுடன் நானும் தொலைபேசியில் உரையாடியுள்ளேன்- மஹிந்த

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம­நா­யக்­க­வுடன் தானும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க தொலை­பேசி  ஒலிப்­ப­திவு தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் அவ­ருக்கு பிறந்­தநாள் வாழ்த்­து­க்களை சொல்­லவே தான் அழைப்­பு­களை எடுத்­தி­ருந்தேன். எனவே தான் மேற்கொண்ட அழைப்­புகள் தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்