ஈ – சிற்றி நிறுவன விருது வழங்கும் நிகழ்வில் முதல்வர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

ஈ . சிற்றி  (E – City)  கல்வி நிவனத்தின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று (12) யாழ்ப்பாணம் ராஜா கிறீம் கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், விருந்தினர்களில் ஒருவராக முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இவ் விழாவில் ஈ . சிற்றி (E – City) கல்வி நிறுவனத்தின் இயக்குனர் திரு.ஜெ.றஜீவன், உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் விருந்தினர்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்