பேருந்து விபத்து ஏற்பட்ட பசறை – மடுல்சீமை பகுதியில் ஆர்ப்பாட்டம்

பசறை – மடுல்சீமை பகுதிக்கு புதிய பேருந்தொன்றினை சேவையில் ஈடுபடுத்தாமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பசறையிலிருந்து எகிரிய நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்திருந்ததுடன், 40 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், குறித்த பயணிகள் பேருந்திற்கு பதிலாக பிரிதொரு பேருந்து இதுவரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனால் மடுல்சீமை, எகிரிய மற்றும் ரோபேரி ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்