கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்திலிருந்து இந்தோனேசியாவை சேர்ந்த  இரு பெண்களின்  சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சவூதி-ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி சென்ற இந்தோனேசிய லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 77 வயதுடைய பெண்ணும் 64 வயதுடைய ஆணொருவரும் விமானத்தில் வைத்து சுகயீனம் ஏற்பட்டு உடல்நலக் குறைவால் அவதியுற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதோடு அவர்களை விமான நிலைய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக விமான நிலைய வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த இந்தோனேசிய நாட்டவர்கள் என்பதோடு இருவரின் சடலங்களும்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்