கங்காரு சின்னத்தில் களமிறங்குகிறார் சஜித்- லியனகே

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் எமக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளிக்குமாயின் பொதுத்தேர்தலில் கங்காரு சின்னத்தில் அவர் போட்டியிடுவாரென இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக லியனகே மேலும் கூறியுள்ளதாவது, “சஜித் பிரேமதாச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தனி முன்னணியில் தனது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கின்றோம்.

மேலும் சஜித் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதி தனது கட்சியில் இருந்து போட்டியிடுவது எமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.

அத்துடன் தற்போதுள்ள கட்சிகளில்  ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒரே அரசியல் கட்சியென்றால் அது எமது கட்சியாகும்.

எனவே பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக  நிறைவடைந்தால் அடுத்த தேர்தலில் கங்காரு அடையாளத்துடன் சஜித் பிரேமதாச போட்டியிடுவார்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்