பொலிஸாருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்

யாழில் பொலிஸார் தேடியதால் தனக்குத் தானே தீ மூட்டி பின்னர், ரயில் முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (திங்கட்கிழமை) காலை 7.00 மணி அளவில் கொடிகாமம் பகுதியில் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

அவர் ரயிலுடன் மோதுவதற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் நேற்று முன்தினம் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையிலேயே அவர் இன்று காலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்திரம் இராஜசீலன் (வயது 32) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்