ஐக்கியநாணய சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பொருட்கள் – முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்டார்.

ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணயசங்கத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது சங்க உறுப்பினர்களுக்கான பொங்கல்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணய சங்கத்தின் கூட்டம் இன்று 13.01.2020 திங்கட்கிழமை மாலை 04மணியளவில் சங்கத்தலைவர் மகாதேவன் தலைமையில் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் அங்கத்தவர்களில் கூடிய சேமிப்பைக்கொண்டிருக்கும் அங்கத்தவர்களுக்கு ஊக்குவிப்பு அன்பளிப்பாக பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு பொருட்களை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார். நிகழ்வில் வடாமாகாணசபை உறுப்பினருடன் வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபைத்தவிசாளர் க.தர்ஷன் மற்றும் யாழ் மாவட்ட கூட்டுறவு சமாச செயலாளர் செ.வேதவல்லி ஆகியோரும் கலந்துகொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
விருந்தினர்களுடன், சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்