தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல்

தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

வன்னி ரோட்டறக் கழகத்தின் ஏற்பாட்டில் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலும், எதிர்காலம் தொடர்பிலும் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது.

வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்  விமல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார், சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை விரிவுரையாளர் செல்லத்துரை ஜெகனேந்திரன், சட்டக்கல்லூரி மாணவன்  கிருஸ்ணபெருமாள் கிசாந், இலங்கை திறந்த பல்கலைக்கழக ஆசிரியர் ல.சதீஸ்குமார், ஐடிஎம் நேசன் கம்பஸ் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோர் இதன்போது கருத்துரைகளை வழங்கினர்.

பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்