தமிழ் மக்களின் சுபீட்சம்மிக்கதோர் ஆண்டாக தைத்திருநாள் மலரட்டும்!

தமிழ் மக்களின் வாழ்வில் சுபீட்சத்துக்குரிய ஆண்டாக மலரும் தைத்திருநாள் அமையட்டும். இந்த ஆண்டில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றம் முழுமைபெற்று, போர்க்குற்றமிழைத்தவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கின்ற ஆண்டாக பிறக்கின்ற தைத்திருநாள் அமையட்டும்.

இவ்வாறு தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் அகில இலங்கை சமாதான நீதிவானும் தமிழ் சி.என்.என் இணையத்தின் நிர்வாக இயக்குநரும் உலக பசி ஒழிப்பு மன்றத்தின் ஸ்தாபகரும், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் துணைத்தலைவரும்  தென்மராட்சி பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளரும் யாழ்.மாவட்ட உணவக உரிமையாளர் ஒன்றியத்தின்உப தலைவருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-

எமது தமிழ்த் தலைமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை மீது எடுக்கின்ற நடவடிக்கையைப் பொறுத்தே தமது நகர்வுகள் அமையும் எனத் தமிழ் மக்களின் காதில் பூ சுற்றுகின்றனர். இவர்கள் தமது எதிர்கால அரசியலுக்காகவும் தமிழ் மக்களிடம் வாக்குப் பெறுவதற்காகவுமே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர் அமைப்புக்களினதும், புலம்பெயர் மக்களினதும் தீரம்மிகு போராட்டங்களினால் – அவர்கள் சர்வதேசத்துக்கு வழங்கிய அழுத்தத்தால் – ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை மீது சர்வதேச அழுத்தம் இறுகியுள்ளது.

ஆனால், இன்று மக்களை ஏமாற்றும் வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது வாக்குப் பிச்சைக்காக இவ்வாறான பொய் பித்தலாட்டங்ளை மேற்கொள்கின்றார்கள். இவர்களின் பித்தலாட்டத்துக்கு எமது தமிழ் மக்கள் என்றைக்கும் ஏமாறக்கூடாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்