சயந்தனின் அலுவலகம் முன் ஆட்லெறி ஷெல் மீட்பு!

யாழ். சாவகச்சேரியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் கே.சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாா் அழைக்கப்பட்டு ஷெல்களை மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த குழியில் மேலும் ஷெல்கள் இருக்கும் என நம்பப்படும் நிலையில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்