சேவை நலன் பாராட்டு விழா…

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் திருமதி கமலேஸ்வரி சோமபால அவர்களை பாடசாலை பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தியேகத்தர்கள்,மாணவர்கள் சேவை நலன் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது 14/01/2020 நேற்றய தினம் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.வை.ஜெயச்சந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியேகத்தர்கள்,மாணவர்கள்,மேலும் பாடசாலை அபிவிருத்தி குழு ஆகியோரினால் விடுகை பெற்றுச் செல்லும் திருமதி கமலேஸ்வரி சோமபால அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்