தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார் : நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள்

கறக்கஹவெவப் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர்  உயிரிழப்பு.

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறக்கஹவெவப் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே இடத்தைச் சேர்ந்த அஜித் குணசேகர (வயது 32) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கறக்கஹவெவ லுனுகல விகாரைக்குப் பின்புறமாக உள்ள காணியில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தந்தையும் மகனும் காவலில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் தந்தை சேனைக்குப் பின்புறமாகச் சென்றபோது, யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியுள்ளார். இதையடுத்து கூக்கிரலிட்டுள்ளார்.

இதையடுத்து அவரது மகன் அங்கு சென்றபோது, மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவிப்பதோடு  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்