காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் உயிரோடு இல்லை! – புலிகள் மீது பழி போடுகின்றார் கோட்டா

“காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் உண்மையில் உயிரிழந்து விட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர். புலிகளே இதற்குப் பொறுப்பு.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்  கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரை, கடந்த வெள்ளிக் கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் ஆராயப்பட்டுள்ளது. அதன்போதே கோட்டாபய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோர் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப்புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய உதவிகளை வழங்க முடியும் என்றும் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்