விபத்தில் படுகாயமடைந்த இளம் வீரர் இன்று உயிரிழப்பு

விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரா் இன்று உயிரிழந்துள்ளார்.

ரவீந்திரன் தனுசன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்

வடமராட்சி, அல்வாய் கிழக்கு, பத்தனை வைரவர் பகுதியில் கடந்த 14ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரவீந்திரன் தனுசன் (வயது 22) என்ற குறித்த இளைஞர் இன்று உயிரிழந்தார்

அல்வாய் கிழக்கு, பத்தனைப் பகுதியில் உள்ள சகோதரனின் பிள்ளைகளுக்குத் தைப்பொங்கல் தினத்துக்குப் புது ஆடை வாங்கப் பணம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற வேளை குறித்த இளைஞர் விபத்தில் சிக்கினார்.

மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரரான இவர், சிறுவயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர். இவரின் இழப்பு அப்பகுதி மக்களையும் விளையாட்டுக்கழகத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்