தோப்பூர் பகுதியில் 750கிராம் கேரளா கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர் ஒருவர் விளக்கமறியலில்

திருகோணமலை தோப்பூர்  பகுதியில் 750 கிராம் கேரளா கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 27ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(20) உத்தரவிட்டார்.
அல்லை நகர்,தோப்பூர் பகுதீயைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மூதூர் பகுதியிலிருந்து தோப்பூருக்கு முச்சக்கர வண்டியில் 750  கிராம் கேரளா காஞ்சாவை கொண்டு சென்ற போதே மூதூர் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டியை நிறுத்தி  சோதனை மேற்கொண்ட போதே சந்தேக நபரை 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்